இலங்கை பௌத்த நாடல்ல – வடக்கு முத­ல­மைச்சர்

இலங்கை பௌத்த நாடல்லஇலங்­கையை பௌத்த நாடென்றோ சிங்­க­ள ­நா­டென்றோ கூறு­வ­தை நான் வலு­வா­க­ நி­ரா­க­ரிக்­கின்றேன். வட­கி­ழக்­கு ­பௌத்­தத்­தை­வேண்டாம் என்­று ­கை­விட்­ட­ ஒ­ரு­ பி­ர­தேசம். அங்­கு ­மீ­ளவும் பௌத்­தத்­தை­ அ­து­வும் ­அ­ர­ச­ உ­த­வி­யுடன் திணிக்கப் பார்ப்­ப­து ­வ­ட­கி­ழக்­கு ­மக்­க­ளின் ­ம­னி­த­ உ­ரி­மை­களை பாதிக்கும் என்று வடக்கு முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்­வரன் தெரி­வித்­துள்ளார்.

முத­ல­மைச்­ச­ரிடம் இலங்கை ஒரு பௌத்­த­நாடு என்­பதை நீங்கள் நிரா­க­ரிக்­கின்­றீர்­களா? ஊட­க­வி­ய­லா­ளர்கள் எழுப்­பிய கேள்­விக்கு பதி­ல­ளிக்­கை­யி­லேயே அவர் இவ்­வாறு குறிப்­பிட்­டுள்ளார்.

முத­ல­மைச்சர் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது, பன்­னெ­டுங்­கா­ல­மாக இலங்­கையின் நிலப்­ப­ரப்­பு­ யாழ்ப்­பாண இராஜ்யம், கண்­டிய இராஜ்யம், உரு­குணு இராஜ்யம் மற்றும் கரை­யோர இராஜ்யம் என்­று­பல இராஜ்­யங்­க­ளாக வேறா­க­ஆ­ளப்­பட்­டு­வந்­தது. நிர்­வா­க ­சீ­ர­மைப்­பு ­என்­ற­ பெ­யரில் ஆங்­கி­லேயர் 1833ஆம் ஆண்­டு­ ச­கல இராஜ்­யங்­க­ளையும் தம­து­ கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்­டு­வந்து முழு இலங்­கைக்­கெ­ன ­ஒ­ரு­ த­னி ­நிர்­வா­க­ அ­ல­கை ­உண்­டாக்­கி­னார்கள். இதனால் வடக்­கு­கி­ழக்கில் பெரும்­பான்­மை­யாக இருந்­த­மக்கள் முழு இலங்­கை­யிலும் சிறு­பான்­மை­யினர் ஆனார்கள். ஆனார்கள் என்­ப­திலும் பார்க்க ஆக்­கப்­பட்­டார்கள் என்­ப­தே­உண்மை. இப்­பொ­ழுதும் வடக்­கு­கி­ழக்கில் தமிழ் பேசும் மக்­க­ளே­பெ­ரும்­பான்­மை­யி­ன­ராக உள்­ளனர்.

முழு இலங்­கை­யையும் சுதந்­தி­ரத்தின் போது­ஆங்­கி­லேயர் இலங்­கை­ய­ரிடம் கைய­ளித்­து­விட்டுச் சென்­றனர். சுதந்­தி­ரத்தின் போது இலங்­கையர் என்­ற­அ­டிப்­ப­டையில் நாட்­டை­ஏற்­றுக்­கொண்ட எம் அர­சியல் வாதிகள் அதி­காரம் கிடைத்த உட­னே­யேதாம் இலங்­கையர் என்­ற­எண்­ணத்தைக் கைவிட்­டு­விட்­டனர். சிங்­க­ளவர், இலங்கைத் தமிழர், மலை­ய­கத்­த­மிழர், முஸ்­லீம்கள், பறங்­கியர், மலேயர் என­தம்மைப் பிரித்­துப்­பார்க்­கவும் சிந்­திக்­க­வுந்­தொ­டங்­கி­விட்­டார்கள்.

பெரும்­பான்­மை­யினர் என்­ற­அ­டிப்­ப­டையில் அவர்கள் சட்­டங்­களைப் பெரும்­பான்­மை­யி­ன­ருக்­கு­ஏற்­ற­வி­தத்­திலும் சிறு­பான்­மை­யி­னரைப் புறக்­க­ணிக்கும் விதத்­திலும் யாத்­தனர். அதனால் 1949ம் ஆண்டில் மலை­யகத் தமி­ழர்கள் வாக்­கு­ரி­மை­ப­றிக்­கப்­பட்­டது. 1956ம் ஆண்­டு ­கொண்­டு வந்­த “­சிங்­களம் மட்­டும்”­சட்டம் தமிழ் அர­ச­ அ­லு­வ­லர்­க­ளின்­ உ­ரித்­துக்­களைப் பறித்­தெ­டுத்­தது. தரப்­ப­டுத்தல் எம் மாண­வர்­களின் உயர் கல்­வியில் கைவைத்­தது. அர­ச ­கா­ணிக்­கு­டி­யேற்­றங்கள் தமிழர் பாரம்­ப­ரி­ய­மா­க ­வாழ்ந்த இடங்­க­ளை­பிற இடங்­களில் இருந்­து ­கொண்­டு ­வந்­த­ பெ­ரும்­பான்­மை­யினர் பறித்­தெ­டுத்­து ­கு­டி­யி­ருக்க உத­வின.

1970 ஆம் ஆண்­ட­ள­வில்த்தான் திரு­கோ­ண­ம­லையைச் சுற்­றி ­சிங்­களக் கிரா­மங்கள் உரு­வாகத் தொடங்­கின. பொலிசார் மேலா­ன­அ­தி­காரம் என்­பன மத்­தியின் கைவசம் இருந்­ததால் வட ­கி­ழக்­கு­ மா­கா­ணங்­களில் சிங்­க­ளப்­ பொ­லி­சாரின் ஆதிக்கம் கூடி­யது. இரா­ணு­வத்­தி­னரும் அழைக்­கப்­பட்­டார்கள். இவ்­வா­றா­னசூழ் நிலை­யில்த்தான் இளை­ஞர்கள் ஆயுதம் ஏந்­தி­னார்கள்.

போர் ­மு­டி­வுக்­கு­ கொண்­டு ­வ­ரப்­பட்­ட ­போ­து­ கு­றிப்­பிட்­ட ­சி­ல ­பௌத்த வணக்­கஸ்­த­லங்­களை விட வேறெங்கும் பௌத்­த­ கோ­யில்­களோ, விகா­ரை­களோ இருக்­க­வில்லை. இப்­பொ­ழுது இரா­ணுவ அனு­ச­ர­ணை­யுடன் பௌத்­த ­வ­ணக்­கஸ்­த­லங்கள் ஆங்­காங்­கே­ உ­ரு­வாக்­கப்­பட்­டு ­வ­ரு­கின்­றன. பௌத்­தர்கள் இல்­லாத இடங்­களில் எல்லாம் அவை எழும்­பு­கின்­றன.

போருக்குப் பின்னர் தான், இது ஒரு “­சிங்­க­ள­பௌத்­த­நா­டு”­ என்­ற­ குரல் ஆவே­ச­மாக ஒலித்­து­ வ­ரு­கின்­றது. சரித்­திரம் பிழை­யா­க ­எ­டுத்­து­ரைக்­கப்­பட்டு இந்­த ­நா­டு ­ஒ­ரு­ சிங்­க­ள ­பௌத்­த ­நா­டு ­என்­ற ­பொய்­யான, பிழை­யான, தவ­றா­ன­ க­ருத்­தை ­முன்­வைத்­து ­வ­ரு­கின்­றார்கள்.

வடக்கில் எந்தக் காலத்­தி­லுமே சிங்­க­ள­ பௌத்­தர்கள் பெரும்­பான்­மை­யா­க­ வா­ழ­வில்லை. தமிழ் பௌத்­தர்கள் வட­ கி­ழக்கில் சில­ நூற்­றாண்­டு­காலம் வாழ்ந்­தார்கள். இன்று இருக்கும் பௌத்­த­ எச்­சங்கள் அவர்­களால் விடப்­பட்­ட­வை­யே­யாகும். நாயன்­மார்­களின் பக்திப் பிர­வாகம் மக்­க­ளை­ ஈர்க்கத் தொடங்­கி­ய ­போ­து­ தமிழ் பௌத்­தர்கள் பௌத்­தத்தைக் கை விட்­டு­ விட்­டு முன் போல் சைவர்கள் ஆனார்கள். ஆக­வே­ வ­ட ­கி­ழக்­கு­ பௌத்­தத்­தை ­வேண்டாம் என்­று­ கை­விட்­ட­ ஒ­ரு­பி­ர­தேசம். அங்­கு ­மீ­ளவும்; பௌத்­தத்­தை­ அ­து­வும் ­அ­ர­ச­ உ­த­வி­யுடன் திணிக்கப் பார்ப்­ப­து ­வ­ட­ கி­ழக்­கு­ மக்­க­ளின் ­ம­னி­த ­உ­ரி­மை­களைப் பாதிப்­ப­தா­னது. வட­ கி­ழக்­கு ­மக்கள் பெரும்­பான்­மை­யினர் பௌத்­தர்கள் அல்­லா­த­வர்கள். இப்­போ­தி­ருக்கும் பௌத்­தர்கள் கூட அர­ ச­உள்­ளீட்டால் அண்மைக் காலங்­களில் உள்­ளேற்­கப்­பட்­ட­வர்கள். ஆகவே இலங்கையைப் பௌத்த நாடென்றோ சிங்கள நாடென்றோ கூறுவதை நான் வலுவாக நிராகரிக்கின்றேன்.

இப்பொழுதும் எப்பொழுதும் வட கிழக்கு மாகாணங்களில் தமிழ்ப்பேசும் மக்களே பெரும்பான்மையினராக இருந்து வந்துள்ளனர். தென்னிந்தியாவில் பௌத்தம் வளர்ச்சியடைந்த காலத்தில் இலங்கையின் வட கிழக்கிலும் பௌத்தம் வளர்ச்சி கண்டது. அங்கு சைவம் தலை தூக்கிய போது இங்கும் சைவம் தலை தூக்கியது. பௌத்தத்தை வேண்டாம் என்று ஒதுக்கிய வட கிழக்கை “பௌத்தநாடு” என்ற அடை மொழியின் கீழ்க்கொண்டு வருவதை நான் கண்டிக்கின்றேன். மற்றைய ஏழு மாகாணங்களில் பௌத்தர்கள் பெரும்பான்மையினராக இருப்பதால் அவற்றில் பௌத்தத்திற்கு முதலிடம் கொடுக்கலாம். வடக்கு கிழக்கு மாகாணங்களோ சமஷ்டி அடிப்படையில் மதச் சார்பற்ற அலகாக உருவாக்கப்பட வேண்டும்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]