இலங்கை போர்க்குற்றங்களை விசாரித்த பாகிஸ்தான் சட்ட வல்லுனர் மரணம்

இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணை செய்த ஐ.நா நிபுணர் குழுவில் இடம்பெற்றிருந்த பாகிஸ்தான் சட்ட வல்லுனர், அஸ்மா ஜஹாங்கிர் மாரடைப்பினால் காலமானார் என்று பாகிஸ்தான் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

66 வயதுடைய, சட்ட வல்லுனரான, அஸ்மா ஜஹாங்கிர் ஐ.நாவின் முன்னாள் நிபுணராவார்.

இலங்கையின் இறுதிக்கட்டப் போரின் போது, போர்க்குற்றங்கள் இடம்பெற்றனவா என்பதைக் கண்டறிந்து, தமக்கு ஆலோசனை வழங்குவதற்காக, ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் நியமித்த மூன்று உறுப்பினர் குழுவில் இவரும் இடம்பெற்றிருந்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]