முகப்பு News Local News இலங்கை போக்குவரத்து சபை சேவை விரிவாக்கம்

இலங்கை போக்குவரத்து சபை சேவை விரிவாக்கம்

புகையிரத ஊழியர்களின் வேலை நிறுத்தத்தை அடுத்து இலங்கை போக்குவரத்து சபை, பயணிகளுக்கான பேருந்து சேவைகளை விரிவுபடுத்தியுள்ளது.

புகையிரத ஊழியர்களின் வேலை நிறுத்தத்தை அடுத்து, பொதுமக்கள் பல்வேறு பாதிப்புகளை எதிர்நோக்கி வருகின்றனர்.

இந்த நிலையில், மக்களின் போக்குவரத்து பிரச்சினைக்கு தீர்வாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக, இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதுடன் தற்போது மேலதிகமான 500 பேருந்துகள் சேவையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் இராணுவத்தினரின் பேருந்துகளும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்துடன் வீதி அனுமதிப் பத்திரத்தை கருத்திற்கொள்ளாது எந்த ஒரு பேருந்தும் எந்தவொரு பகுதிகளிலும் சேவையில் ஈடுபடவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

அத்துடன், புகையிரத பருவகால சீட்டை வைத்துள்ள பயணிகள் இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகளில் இலவசமாக பயணிக்க முடியும் என்றும் அரசாங்கம் அறிவித்துள்ளது.

மேலும், இந்த விடயங்கள் தொடர்பில் ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால், அது தொடர்பாக 0117 505 555 என்ற தொலைபேசியினூடாக தொடர்பு கொண்டு அறிவிக்க முடியும் என இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com