இலங்கை பொலிஸாரின் இடமாற்றங்கள் தற்காலிகமாக ரத்து

    இலங்கை பொலிஸாரின் இடமாற்றங்கள் தற்காலிகமாக ரத்து

இடமாற்றங்கள்

இலங்கை பொலிஸ் உத்தியோகத்தர்கள் அனைவரதும் இடமாற்றத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தர இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு இந்த இடமாற்றங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸ் மா அதிபர் வௌியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள், பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள், பொலிஸ் அத்தியட்சகர்கள், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்கள், தலைமையக பொலிஸ் பரிசோதகர்களுக்கு பொலிஸ் மா அதிபரால் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

நேற்று முதல் பெப்ரவரி 15ஆம் திகதி வரை அமுலுக்கு வரும் வகையில், இந்த இடமாற்றங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]