இலங்கை பெண் சுசானாவினால் ஏமாற்றப்பட்ட எங்க வீட்டு மாப்பிளை ஆர்யா – ஐயோ பாவம்!!

பிரபல நடிகர் ஆர்யா ஒரு பிரபல தொலைக்காட்சியில் திருமணத்திற்காக பெண் தேடுகிறார். இவருக்காக 16 பெண்கள் எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்கள். இந்த பெண்கள் ஆர்யாவை காதல் செய்வது போலும், ஆர்யாவின் அன்பிற்கு சண்டை போடுவது போலவும் இந்த நிகழ்ச்சியில் காண்பிக்கிறார்கள். அதிலிருந்த சில பெண்களை எலிமினேட் செய்து வருகிறார்.

இந்த நிகழ்ச்சியில் உள்ள போட்டியாளர்களில் ஈழத்து பெண் சுசானாதான் முதல் இடத்தில் இருப்பதாக அண்மையில் தகவல்கள் வெளியாகியிருந்தது.

மேலும் அண்மையில்தான் ஆர்யா சுசனாவின் சொந்த ஊரான இலங்கையின் யாழ்ப்பாணம் அனலை தீவிற்கு சென்றிருந்தார்.

இந்நிலையில் தற்போது சுசானாவின் புகைப்படங்கள் என கூறப்பட்டு சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

குறித்த புகைப்படங்களை பார்ப்பவர்கள் ஈழத்து பெண் சுசானா இப்படிப்பட்டவரா என திட்டி வருகின்றனர்.

கனடாவில் சுசானா இருக்கும் போது ஞாயிற்று கிழமைகளில் ஆண் தோழர்களுடன் ஊர் சுற்றுவதாகவும் தகவல்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்பத்தியுள்ளது.

எது எவ்வாறு இருப்பினும் இது தொடர்பில் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]