இலங்கை பெண் கனடாவில் படுகொலை

இலங்கை பெண்

இலங்கை பெண் கனடாவில் படுகொலை

இலங்கையை சேர்ந்த தமிழ் பெண்ணொருவர் கனடாவில் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஸ்கார்பரோ பகுதியை சேர்ந்த 46 வயதுடைய ஜெயந்தி சீவரத்னம் என்ற தமிழ் பெண்ணே கொலை செய்ப்பட்டுள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை மாலை மால்வேர்ன் பகுதியில் குறித்த பெண்ணின் உடல் கண்டுபிடிக்கப்பட்டதாக டொறாண்டோ பொலிஸார் தெரிவித்துள்ளார்.

குறித்த பெண்ணின் உடலில் அதிகமான காயங்கள் காணப்பட்டதாக அந்நாட்டு பொலிஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

படுகாயமடைந்த நபரை பாதசாரிகள் வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றனர், எனினும் அவர் உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது.

அவரது உடலில் ஏற்பட்ட படுகாயங்கள் காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக மரண விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

இந்த கொலைச் சம்பவம் தொடர்பில் உயிரிழந்த பெண்ணின் கணவர் கதிர்காமநாதன் சுப்பையா கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]