இலங்கை பிரஜைகளுக்கு இலத்திரனியல் வெளிநாட்டு கடவுசீட்டு

இலங்கை பிரஜைகளுக்கு இலத்திரனியல் வெளிநாட்டு கடவுச்சீட்டொன்றினை அறிமுகம் செய்து வெளியிட அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

உள்நாட்டலுவல்கள், வடமேல் அபிவிருத்தி, கலாசார விவகார அமைச்சர் எஸ்.பி. நாவின்ன மற்றும் தொலைத்தொடர்புகள், டிஜிட்டல் உட்கட்டமைப்புகள் அமைச்சர் ஹரின் பேர்ணான்டோ ஆகியோர் இணைந்து முன்வைத்த யோசனைகளுக்கே அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை பிரஜைகளுக்காக வேண்டி இலத்திரனியல் வெளிநாட்டு கடவுச்சீட்டு ஒன்றினை அறிமுகம் செய்வது தொடர்பிலான நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதன்கீழ் அனைத்து வகை தகவல்களையும் உள்ளடக்கிய சிம் அட்டை வடிவிலான இலத்திரனியல் மாதிரி ஒன்று வெளியிடப்பட உள்ளது.

அதனடிப்படையில், இலத்திரனியல் வெளிநாட்டு பயண கடவுச்சீட்டினை அறிமுகப்படுத்தல் மற்றும் வெளியிடல் வேலைத்திட்டத்தினை முறையான ஆய்வின் பின்னர் அரச தனியார் இணைப்பின் கீழ் செயற்படுத்துவது தொடர்பிலான வேலைகள் ஆரம்பமாகவுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]