இலங்கை பல்வேறு நாடுகளுடன் குற்றவாளிகளை நாடு கடத்தும் உடன்படிக்கைகளில் கைச்சாத்து

அமைச்சர் ருவன் விஜேவர்த்தனஇலங்கை, பல்வேறு நாடுகளுடன் குற்றவாளிகளை நாடு கடத்தும் உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது

பாதுகாப்புத்துறை ராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தன இந்த தகவலை இன்று வெளியிட்டுள்ளார்

இந்த உடன்படிக்கைகளின் கீழ் இரண்டு தரப்புக்களிலும் உள்ள குற்றவாளிகளை நாடு கடத்தமுடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்

இறுதியாக  குற்றவாளிகளை நாடு கடத்தும் உடன்படிக்கை யுக்ரெய்ன் நாட்டுடன் செய்துக்கொள்ளப்பட்டது.

விரைவில் ஆகிய மற்றும் ஐரோப்பியாவின் பல நாடுகளுடன் இந்த உடன்படிக்கைகள் செய்துக்கொள்ளப்படவுள்ளன

ரஸ்யா, யுக்ரெய்ன், சீனா மற்றும் வியட்நாட் ஆகிய நாடுகளுடன் செய்துக்கொள்ளப்பட்ட குற்றவாளிகளை நாடுகடத்தும் உடன்படிக்கைகளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தவேளையிலேயே ராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தன தமது தகவல்களை வெளியிட்டார்.