இலங்கை படகுகள் விடுவிப்பு

இலங்கை படகுகள் விடுவிப்பு

இந்திய கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைப்பற்றப்பட்ட 3 இலங்கை படகுகள் நேற்று விடுவிக்கப்பட்டுள்ளன.

மீன்பிடி வளங்கள் திணைக்கள அதிகாரிகள் முன்னெடுத்த நடவடிக்கையின் பின்னர், இந்த படகுகள் இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இந்திய – இலங்கை நல்லிணக்கத்தின் அடிப்படையில் இந்த படகுகள் விடுவிக்கப்பட்டுள்ளன.

காங்கேசன்துறை கடற்பரப்பில் வைத்து இந்த படகுகள் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், இவை 2015 – 2017 ஆம் ஆண்டு காலப்பகுதிக்குள் கைப்பற்றப்பட்ட படகுகள் என்பது குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]