இலங்கை நிர்மாணத்துறையிலும் சீனாவின் ஆதிக்கம் அதிகரிப்பு

இலங்கை நிர்மாணத்துறையிலும் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால், உள்ளூர் நிறுவனங்கள் பெரிதும் பதிப்படைந்து வருவதாக கூறப்படுகின்றது.

இலங்கையில் பொருளாதாரம் உட்பட பல்வேறு துறைகளிலும் சீன நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றது. இந்நிலையில் இலங்கையிலுள்ள கட்டுமான நிறுவனங்கள் உரிய திட்டத்தினை தெளிவாக வகுக்காதமையின் காரணத்தினால், சீனா மற்றும் இந்தியாவைச் சேர்ந்த நிறுவனங்கள் பாரிய கட்டுமான திட்டங்களை கைப்பற்றிவருவதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.

தற்போது இலங்கையில் முன்னெடுக்கப்பட்டுவரும் பெரும் கட்டுமானத்திட்டங்களில் 40 வீதமானவற்றை சீனாவைச் சேர்ந்த நிறுவனங்களே முன்னெடுத்துவருகின்றன.

இலங்கை வர்த்தக சம்மேளனத்துடன் அண்மையில் இடம்பெற்ற சந்திப்பொன்றின் போது, இலங்கையில் நிர்மாணத்துறையில் ஈடுபட்டுவருகின்ற சீன தொழிற்துறையினரைப் பிரதிநிதித்துவம் செய்கின்ற சீன சர்வதேச நிர்மாணத்துறை அமைப்பு, அடுத்து வருகின்ற மூன்று ஆண்டு காலப்பகுதியில் சீன நிறுவனங்கள் நிர்மாணத்துறையிலுள்ள 70 வீதமான பங்கைக் கைப்பற்றுவதற்கு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இதனையடுத்து உள்ளுர் நிர்மாணத்துறையினருக்கு ஏற்பட்டுள்ள ஆபத்தை உணர்ந்து கொண்டுள்ள நிர்மாணக் கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபை, உள்ளுர் நிறுவனங்களைப் பாதுகாப்பதற்கான சட்டத்தைக் கொண்டுவருவதற்கான அனுமதியை அரசாங்கத்திடம் எதிர்பார்த்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]