இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மேதின பேரணி

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மேதினக்கூட்டமும், பேரணியும் நுவரெலியா நகரில் இடம்பெற்றது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், பொது செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் இடம்பெற்றது.

மேதினத்தின் பேரணி நுவரெலியா நகர சுற்றுவட்டத்திற்கு முன்பாக ஆரம்பமாகி நுவரெலியா நகர மத்தியில் அமைக்கப்பட்டிருந்த மேடையை நோக்கி வந்தது.

இதன்போது இ.தொ.கா.வின் போசகரும், உள்ளக அலுவல்கள் மற்றும் வடமேல் அபிவிருத்தி பிரதி அமைச்சரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான முத்துசிவலிங்கம் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]