இலங்கை தொடர்பான 200 கோப்புகளை அழித்த பிரித்தானியா

பிரித்தானிய வெளிவிவகார அலுவலகம் இலங்கை தொடர்பான 200 கோப்புகளை அழித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

த கார்டியன் சஞ்சிகை இதுதொடர்பிலான செய்தியினை வெளியிட்டுள்ளது.

விடுதலைப்புலிகள் தோற்றம் பெற்ற காலம் முதல் பிரித்தானியா இலங்கைக்கு இராணுவ பயிற்சிகளை வழங்கிய காலம் வரையான கோப்புகளே இதன்போது அழிக்கப்பட்டுள்ளன.

குறித்த கோப்புகள் அழிக்கப்பட்டுள்ளமையினைத் தொடர்ந்து இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் ஆரம்பத்தில் இலங்கைக்கும் பிரித்தானியாவிற்கும் இடையில் நிலவிய உறவுகள் குறித்த ஆவணங்கள் எதுவும் இல்லாத நிலை தோன்றியுள்ளதாக கூறப்படுகின்றது.

இதேவேளை, கடந்த 1978ஆம் ஆண்டு முதல் கடந்த 1980 ஆம் ஆண்டுகாலப்பகுதியுடன் தொடர்புடைய 180 கோப்புகளை அழித்துவிட்டதை பிரித்தனியா வெளிவிவகார அலுவலகம் உறுதி செய்துள்ளது.

எனினும் இந்த ஆவணங்கள் எப்படி எப்போது அழிக்கப்பட்டன என்பதை தெரிவிப்பதற்கு பிரித்தானிய வெளிவிவகார அலுவலகம் மறுத்துள்ளது.

நிரந்தரமாக பாதுகாக்கப்படவேண்டிய தேவையில்லாத கோப்புகள் அழிக்கப்பட்டிருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]