இலங்கை தேயிலைக்கு 150 வருடங்கள்

இலங்கையில் தேயிலை உற்பத்தி ஆரம்பிக்கப்பட்டு 150 வருடங்கள் நிறைவடைகின்றன. இலங்கை தேயிலைக்குஇதனை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வர்த்தக மற்றும் கல்விக் கண்காட்சி பதுளையில் எதிர்வரும் 30ம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

உரப் பாவனை மற்றும் அந்த உரம் தயாரிக்கப்படும் முறை உள்ளிட்ட விடயங்களை கண்காட்சியின் மூலம் அறிந்து கொள்ள முடியும். உயர் தரத்திலான தேயிலைத் தயாரிப்பிற்கு கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து சிறிய தேயிலைத் தோட்ட உரிமையாளர்களுக்கு தெளிவுபடுத்துவதற்கு இதன் மூலம் ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இலங்கை தேயிலைச் சபை, தேயிலை ஆய்வு நிறுவகம், சிறிய தேயிலைத் தோட்ட அபிவிருத்தி அதிகார சபை, சிறிய தேயிலை தோட்ட உரிமையாளர்கள் சங்க சம்மேளனம், தேயிலைத் தொழிற்சாலை உரிமையாளர்களின் சங்கம் ஆகியவற்றின் பங்களிப்புடன் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அமைச்சர் நவீன் திசாநாயக்க கண்காட்சியை ஆரம்பித்து வைக்க உள்ளார். பல கண்காட்சிக் கூடங்களும் இங்கு அமைந்துள்ளன.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]