முகப்பு News Local News இலங்கை தமிழரசுக் கட்சியின் பிரதிநிதிகளின் மக்கள் சந்திப்பு

இலங்கை தமிழரசுக் கட்சியின் பிரதிநிதிகளின் மக்கள் சந்திப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பிரதிநிதிகளின் மக்கள் சந்திப்பு நிகழ்வு சித்தாண்டி ஈரளக்குளம் கிராம அதிகாரி பிரிவில் ஞாயிற்றுக்கிழமை (02) நடைபெற்றது.

ஏறாவூர்ப்பற்று (செங்கலடி) பிரதேச சபையின் சித்தாண்டி வட்டார உறுப்பினர் எஸ்.முரளிதரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களாக சீனித்தம்பி யோகேஸ்வரன், ஞா.ஸ்ரீநேசன், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் உட்பட கட்சியின் பிரநிதிகளும் கலந்து கொண்டனர்.

ஈரளக்குளம், இலுக்கு, கூழாவடி ஆகிய கிராம மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை ஆராய்ந்து உடனடி நடவடிக்கைகளையும் மேற்கொண்டனர்.

இந்த வகையில் குளங்கள் திருத்துதல், வீதிகள் திருத்துதல், வீதி அருகாமையில் உள்ள காடுகளை அகற்றல், ஆலயங்களின் கட்டுமானத்துக்கு உதவுதல், குடிநீர் பிரச்சனை, போக்குவரத்து, பாலங்கள் அமைத்தல், காணிகளுக்கு உறுதி, ஒப்பம் வழங்கல், பாடசாலை மாணவர்களின் கல்வி பிரச்சனை, மக்களின் வாழ்வாதார பிரச்சனை உட்பட்ட பல விடயங்கள் ஆராயப்பட்டது.

இவ்வகையில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் இலுக்கு பாடசாலைக்கு கணனி தொகுதி வழங்குவதற்கும், ஈரளக்குளத்தில் ஒன்றரை இலட்சம் ரூபாய் நிதியில் பொதுக் கிணறு கட்டுவதற்கும் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி வழங்கியதுடன், இலுக்கு, ஈரளக்குளம் ஆகிய கிராம மக்களின் சுயதொழில் நடவடிக்கைக்கு உதவுவதாகவும் தெரிவித்தார்.

அத்தோடு என்னால் வழங்கப்பட்ட எழுத்து மூல வேண்டுகோளை ஏற்று ஜனாதிபதி கிரான் பாலத்தை மிக விரைவாக அமைப்பதற்கும், அதற்கு முன்பாக கிரான் குடும்பிமலை வடமுனை ஊத்துச்சேனை தொடர் வீதியை அமைப்பதற்கும் முன் வந்தமையையும், தேசிய நல்லணிக்க அமைச்சு மூலம் ஒழுங்கு செய்த பாலங்களையும் அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் சுட்டிக்காட்டினார்.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு மானிய அடிப்படையில் வீட்டுத் திட்டங்கள் வரும் போது யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதி என்ற ரீதியில் இப்பிரிவு முன்னுரிமை வழங்கப்பட்டு வீடுகள் அமைக்கப்படும் எனவும் உறுதி வழங்கினார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com