இலங்கை டெஸ்ட் கிரிக்கட் அணித் தலைவர் பிணையில் விடுதலை!

இலங்கை டெஸ்ட் கிரிக்கட் அணித் தலைவர் திமுத் கருணாரத்ன மதுபோதையில் வாகனம் செலுத்தி விபத்தை ஏற்படுத்திய காரணத்தால் கைது செய்யப்பட்டிருந்தார். தற்போது அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

பொறளை – கிங்ஸி ஹோட்டன் சந்தியில், அவர் பயணித்த மகிழுந்து, முச்சக்கர வண்டி ஒன்றுடன் மோதி இன்று காலை விபத்துக்குள்ளானதாக பொலிஸார்  தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் சிறு காயங்களுக்கு உள்ளான முச்சக்கரவண்டிச் சாரதி, கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வாகன விபத்து இடம்பெற்றபோது திமுத் கருணாரத்ன மதுபோதையில் இருந்த காரணத்தினால் பொலிஸார் அவரைக் கைது செய்துள்ளனர்.

இந்த நிலையில், பொலிஸார்  பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்ட திமுத் கருணாரத்னவை, நாளைய தினம் புதுக்கடையில் உள்ள 7ஆம் இலக்க நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அறிவுறுத்தபப்பட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]