முகப்பு Business இலங்கை – சிங்கப்பூர் உடன்படிக்கை கடந்த மே மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது

இலங்கை – சிங்கப்பூர் உடன்படிக்கை கடந்த மே மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது

இலங்கை – சிங்கப்பூர் உடன்படிக்கை கடந்த மே மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக அமைச்சர் மலிக் சமரவிக்கிரம தெரிவித்துள்ளார்.
குருநாகலில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த விடயத்தில் பிரச்சினைகள் இருப்பின் அவற்றுக்கு எதிர்காலத்தில் முகங்கொடுக்க முடியம்.
சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற்றதன் பின்னரே இந்த உடன்படிக்கையை நடைமுறைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அமைச்சர் மலிக் சமரவிக்கிரம தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com