இலங்கை சந்தையில் முற்றிலும் மாறுபட்ட புதிய பசுமை எரிவாயுவினை விநியோகிப்பதற்கு முன்வந்துள்ளது – இந்திய

எரிவாயுவினை இலங்கையில் தற்போது நடைமுறையில் உள்ள பொருளாதார சீர்திருத்தங்கள் இந்திய முதலீட்டாளர்களை ஆர்வப்படுத்தியுள்ளதுடன் இந்தியாவின் மிகப் பெரிய நிறுவனமாக திகழும் எல்.என்.ஜி எரிவாயு நிறுவனம், இலங்கை சந்தையில் முற்றிலும் மாறுபட்ட புதிய பசுமை எரிவாயுவினை விநியோகிப்பதற்கு முன்வந்துள்ளது என இந்திய தொழில்துறையின் கூட்டமைப்பின் வர்த்தக பிரதிநிதிக் குழுத் தலைவர் ரமேஷ் குமார் முத்தா தெரிவித்தார்.

கடந்த வாரம் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சில் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுடனான இடம்பெற்ற விசேட சந்திப்பின் போதே ரமேஷ் குமார் முத்தா இதனை தெரிவித்தார்.

இவ்விசேட சந்திப்பின் போது ரமேஷ் குமார் முத்தா தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்:

இலங்கைக்கான இந்தியாவின் முதலீடு ஆண்டுதோறும் 50-70 மில்லியன் அமெரிக்க டொலருக்கு இடைப்பட்டதாக காணப்படுகின்றது. இந்திய முதலீட்டாளர்கள் இங்கு குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளனர். உதாரணமாக 2015 ஆம் ஆண்டு இந்தியா, இலங்கையின் ஐந்தாவது மிகப்பெரிய முதலீட்டாளராக காணப்பட்டது. உங்கள் முதலீடுகள் இரு வழி வர்த்தகத்தை அதிகரிக்கலாம். கடந்த ஆண்டு எங்கள் மொத்த இருதரப்பு வர்த்தகமானது 4.3 பில்லியன் அமெரிக்க டொலர் ஆகும்.

இந்தியாவிற்கான எமது முன்னணி ஏற்றுமதிகள் பல்வகைப்பட்ட முயற்சிகளின் பன்முகத்தன்மையைக் காட்டியது. இலங்கையில் இருந்து மசாலா, காகித பெட்டி, கப்பல்கள் மற்றும் படகுகள் முக்கிய ஏற்றுமதிகளாக காணப்பட்டது. மேலும் முக்கியமாக, இந்தியாவுக்கான நமது ஏற்றுமதிகளில்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]