இலங்கை குறித்த கட்டுரைக்கு சீனா மறுப்பு

இலங்கை குறித்து நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையில் வெளியான கட்டுரை உண்மைக்கு புறம்பானது என சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

அத்துடன், இது குறித்து சீன தூதரகம் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் பிரச்சாரங்களுக்காக சீனா நிதியுதவி வழங்கியதாக குறித்த பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது.

சைனா ஹாபர் நிறுவனம் ஊடாக 7.6 மில்லியன் டொலரை சீனா இவ்வாறு வழங்கியுள்ளதாக ‘நியூயோக் டைம்ஸ்’ பத்திரிகையில் இரண்டு தினங்களுக்கு முன்னர் வெளியான செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், குறித்த செய்தியானது அரசியல் நோக்கங்களுக்காக வெளியிடப்பட்டுள்ளதாக சீன தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, இந்த விடயம் தொடர்பில் பொலிஸ்மா அதிபரின் பணிப்புக்கு அமைய, பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினால், விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]