இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி விளக்கமறியலில்

கைது செய்யப்பட்ட இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி எதிர்வரும் நவம்பர் 01ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளார்.

கொழும்பு மேலதிக நீதவான் நேற்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் நிறுவனம் செய்த முறைப்பாட்டுக்கமைய மேற்கொண்ட விசாரணைகளின் படி இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி பியல் நந்தன நேற்று முந்தினம் கைது செய்யப்பட்டார்.

இங்கிலாந்து அணியுடனான போட்டித் தொடரிற்கான ஔிபரப்பு உரிமத்தை பெற்றுக்கொள்வது தொடர்பில் சுமார் 5.5 மில்லியன் அமெரிக்க டொலர் மோசடி செய்ய முற்பட்டமை தொடர்பிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]