இலங்கை கிரிக்கெட் அணி இன்று இங்கிலாந்து பயணம்

2017 ஐ.சி.சி.சம்பியன்ஸ் வெற்றிக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்வதற்காக இலங்கை அணி இன்று இங்கிலாந்து பயணமாகவுள்ளது.
நேற்று கொழும்பு மொவென்பிக் ஹோட்டலில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே இலங்கை கிரிக்கெட் வாரியத் தலைவரும் அமைச்சருமான திலங்க சுமத்திபால கூறினார்.

இங்கு கருத்து வெளியிட்ட இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் அஞ்சலோ மத்தியுஸ், போட்டிகளை எதிர்கொள்ளக்கூடிய அளவில் இலங்கை அணி வீரர்கள் இருப்பதாகக் குறிப்பிட்டார்.

இப்போட்டிக்காக இலங்கை அணி புதிதாக கண்டியில் நிர்மாணிக்கப்பட்ட செயற்திறன் மிக்க பயிற்சி நிலையத்தில் இலங்கை அணியின் பிரதான பயிற்றுவிப்பாளர் கிரகம் போர்ட் வழங்கியுள்ளார்.

1.மெத்யூஸ் (தலைவர்), 2. உபுல் தரங்கா (துணை தலைவர்), 3. டிக்வெல்லா, 4. குசால் பெரேரா, 5. குசால் மெண்டிஸ், 6. சமரா கபுகேதரா, %. அசேலா குணரத்னே, 8. தினேஷ் சந்திமல், 9. லசித் மலிங்க, 10. சுரங்க லக்மல், 11. நுவான் பிரதீப், 12. நுவான் குலசேகரா, 13. திசாரா பெரேரா, 14. லக்ஷ்மண் சண்டகன், 15. சீகுகே பிரசன்னா ஆகியோர் இன்று 2017 ஐ.சி.சி.சம்பியன்ஸ் வெற்றிக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்வதற்காக லண்டன் நோக்கிச் செல்கின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]