இலங்கை கர்ப்பிணியிடம் தமிழகத்தில் விசாரணை

இலங்கை கர்ப்பிணி

இலங்கையில் இருந்து இராமேசுவரத்திற்கு கள்ளத்தோணி மூலம் கணவர் மற்றும் குழந்தையுடன் வந்த கர்ப்பிணி பெண்ணிடம் தமிழக பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நேற்று முன்தினம், ராமேசுவரம் அருகே முகுந்தராயர் சத்திரம் கடற்கரையில் இலங்கை ரப்பர் படகு கேட்பாரற்ற நிலையில் நின்றுள்ளது.

அதனை கைப்பற்றிய கடலோர காவல்துறையினரும், சுங்க அதிகாரிகளும் விசாரணை நடத்தியுள்ளனர்.

இதன்போது, ராமேசுவரம் அருகே உள்ள அரிச்சல்முனை கடற்கரையில் கள்ளத்தோணி மூலம் கர்ப்பிணி பெண் தனது குடும்பத்தினருடன் வந்து இறங்கியதாக தகவல் கிடைத்துள்ளது.

பின்னர், கர்ப்பிணி பெண், அவரது கணவர் நிரோ‌ஷன் (வயது 28), குழந்தை மற்றும் உறவினரை பிடித்து தனுஷ்கோடி பொலிஸ் நிலையம் கொண்டு சென்றனர். அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது மேற்கொள்ளப்பட்ட விசாரணையின்போது, மனைவியின் பிரசவத்துக்காக அங்கு வந்ததாக தெரிவித்துள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]