இலங்கை ஈரான் – தொடர்பை வலுப்படுத்த ஈரான் எதிர்பார்ப்பு

உறவை வலுப்படுத்தஈரான் மற்றும் இலங்கைக்கு இடையிலான உறவை வலுப்படுத்த எதிர்பார்த்துள்ளதாக ஈரான் ஜனாதிபதி ஹசன் ரவுகானி தெரிவித்தார்.

இதன்படி, இரு நாடுகளுக்கும் இடையிலான, கலாச்சாரம், அறிவியல் மற்றும் வர்த்தகம் ஆகிய துறைகளிலான உறவினை மேலும் வலுப்படுத்த எதிர்பார்த்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஈரானுக்கான புதிய இலங்கைத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள, மொஹமட் கரீப் அனிஸ்சின் நியமனப் பத்திரத்தை கையளிக்கும் நிகழ்வின் போதே, ஈரான் ஜனாதிபதி மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.

மேலும், இரு நாடுகளுக்கும் இடையிலான இரு தரப்பு ஒத்துழைப்பு தொடர்பில் புதிய வேலைத் திட்டங்களை கட்டியெழுப்புவது குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளதாக, தெரியவந்துள்ளது.

அத்துடன் வர்த்தகம் வங்கிகள் ஊடாக இலங்கைக்கு தேவையான ஒத்துழைப்புக்களை வழங்க ஈரான் ஜனாதிபதி இதன்போது இணங்கியுள்ளார்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]