இலங்கை இந்திய மீனவர் பிரச்சினை நாளை மறுதினம் கொழும்பில் இருதரப்பு பேச்சு

இலங்கை இந்திய மீனவர் விவகாரம் தொடர்பிலான இரண்டாவது சுற்றுப் பேச்சுகள் நாளை மறுதினம் கொழும்பில் நடைபெறவுள்ளது.

இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி கடந்த காலங்களில் இலங்கை மீன்வளங்களை சூறையாடியதால் படகுகள் சகிதம் பல இந்திய மீனவர்கள் கடற்படையால் கைதுசெய்யப்பட்டனர்.

130 இற்கும் அதிகமான இழுவை படகுகள் தற்போது இலங்கை அரசின் கட்டுபாட்டில் உள்ளது.
கைதுசெய்யப்படும் மீனவர்கள் மாத்திரம் இணக்கப்பாட்டின் அடிப்படையில் விடுதலைச் செய்யப்பட்ட போதிலும் படகுகளை விடுவிக்க முடியாது என்று இலங்கை அரசு திட்டவட்டமாக அறிவித்துவிட்டது.

முன்னதாக முதல் சுற்றுப் பேச்சுகள் டெல்லியில் இடம்பெற்றிருந்தது. இதன்போது இந்திய அரசின் சார்பில் இலங்கையின் கட்டுப்பாட்டில் உள்ள படகுகளை விடுவிக்கும் படி கோரிக்கை விடுக்கப்பட்டது. 2017ஆம் ஆண்டு இறுதிவரை டொலர் படகுகளில் மீன்பிடியில் ஈடுபடவும் சந்தர்ப்பம் கோரப்பட்டது.

என்றாலும், இலங்கை அரச தரப்பும் குறித்த இரு கோரிக்கைகளையும் திட்டவட்டமாக நிராகரித்திருந்தது. இதேவேளை, கடந்த மாதம் தமிழக மீனவர் ஒருவர் துப்பாக்கியால் இந்திய இலங்கை கடற்பரப்பில் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார். குறித்த மீனவரை இலங்கை கடற்படை சுற்றுக்கொண்டதாக கடும் குற்றச்சாட்டுகள் தமிழக அரசு சார்பில் முன்வைக்கப்பட்டதுடன், மீனவனின் இறப்புக்கு நீதி வேண்டி தொடர்ச்சியான போராட்டங்களும் தமிழகத்தில் இன்னமும் வெடித்த வண்ணமே உள்ளன.

மிகவும் காத்திரமான ஒரு சூழலிலேயே நாளை மறுதினம் இருதரப்பு பேச்சுகள் நடைபெறவுள்ளன. இந்திய தரப்பில் இருந்து பேச்சுகளுக்காக விவசாய மற்றும் மீன்வள அமைச்சர் ராதா மோகன் சிங் உயர்மட்ட குழுவொன்றும் இலங்கை தரப்பில் மீனவள அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையிலான குழுவொன்றும் பிரசன்னமாகவுள்ளது.

இதேவேளை, இன்று வடமாகாண மீன சங்கங்களுக்கும் அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கும் விசேட சந்திப்பொன்று இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]