இலங்கை – இங்கிலாந்து இடையிலான ஒருநாள் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது!

இலங்கை – இங்கிலாந்து இடையிலான ஒருநாள் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது!

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி, இடைவிடாத மழை காரணமாக கைவிடப்பட்டுள்ளது.

நேற்று (புதன்கிழமை) தம்புள்ள மைதானத்தில் முதலாவது ஒருநாள் போட்டி ஆரம்பமானது.

இந்த போட்டியில் இலங்கை அணி நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் களத்தடுப்பை தெரிவு செய்த நிலையில், இங்கிலாந்து அணி 15 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுகளை இழந்து 92 ஓட்டங்களை பெற்றிருந்தது.

அணி சார்பில் ஜேசன் ரோய் 24, ஜொன்னி பெயர்ஸ்டோ 25, ஜொய் ரூட் ஆட்டமிழக்காமல் 25, மோர்கன் அட்டமிழக்காமல் 14 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட போது மழை குறுக்கிட்டதால் போட்டி இடைநிறுத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து தொடர் மழை காரணமாக போட்டி கைவிடப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]