இலங்கை – இங்கிலாந்துக்கு இடையிலான 1வது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று ஆரம்பம்

இலங்கை – இங்கிலாந்துக்கு இடையிலான 1வது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று ஆரம்பம்

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று(புதன்கிழமை) ஆரம்பமாகவுள்ளது.

இதன்படி இலங்கை நேரம் 2.30 மணியளவில் தம்புள்ளை, ரங்கிரி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் குறித்த போட்டி ஆரம்பமாகவுள்ளது.

அந்த வகையில் தினேஷ் சந்திமால் தலைமையிலான இலங்கை அணியில் குழாமில் நிரோஷன் திக்வெல்ல, குசல் பெரேரா, உபுல் தரங்க, தனஞ்சய டிசில்வா, தசூன் சானக்க, திஸர பெரோ, அகில தனஞ்சய, லக்ஷன் சந்தகன், லசித் மலிங்க, நுவன் பிரதீப், கசூன் ராஜித, அமில அபன்ஷோ, துஷ்மந்த சமீர மற்றம் சண்டீர சமர விக்ரம ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

ஈயோன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியில், குழாமில் ஜோஸ் பட்லர், ஜொசன் ரோய், ஜோனி பிரிஸ்டா, ஜோ ரூட், பென்ஸ்டோக்ஸ், மொய்ன் அலி, லியாம் டாவ்சன், சாம் குரான், கிரிஸ் வோக்ஸ், மார்க் வூட், டோம் குரான், அடில் ரஷீத், அலெக்ஸ் ஹேல்ஸ் மற்றும் ஒலிஸ்டோன் ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே சி.சி.யின் ஒரு நாள் தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் இங்கிலாந்து அணியை இலங்கை அணி எதிர்கொள்வது என்பது மிகவும் கடினம் என்று, இலங்கை அணியின் தலைவர் தினேஷ் சந்திமல் தெரிவித்துள்ளார்.

எனவே இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியானது ரசிகர்களுக்கு சுவாரஸ்சியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 ஒருநாள் போட்டி, ஒரு இருபதுக்கு 20 போட்டி, 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது.

அதன்படி இப் போட்டித் தொடரானது இன்று ஆரம்பமாகி எதிர்வரும் நவம்பர் மாதம் 27 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]