இலங்கை ஆசிரியர் சங்கத்தின் 61வது பேராளர் மாநாடு

“ஆசிரிய சேவைக்கு ஆசிரிய பேரவையை வென்றெடுப்போம்” என்ற தொனிப்பொருளிலமைந்த இலங்கை ஆசிரியர் சங்கத்தின் 61வது பேராளர் மாநாடு வெள்ளிக்கிழமை 29.06.2018 இடம்பெறவுள்ளதாக அச்சங்கம் அறிவித்துள்ளது.

அன்றைய தினம் பதுளை தலைமை அஞ்சலக கேட்போர் கூடத்தில் காலை 10 மணிக்கு இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பிரியந்த பெர்னான்டோ தலைமையில் நிகழ்வுகள் ஆரம்பமாகின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கல்வி வலயங்கள் உட்பட இலங்கையின் 98 கல்வி வலயங்களிலிருந்தும் சிங்கள தமிழ் முஸ்லிம் ஆசிரியர்கள் இந்தப் பேராளர் மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளையின் செயலாளர் பொன்னுத்துரை உதயரூபன் தெரிவித்தார்.

இலங்கை ஆசிரியர் இலங்கை ஆசிரியர்

மாணவர்களினதும் ஆசிரியர்களினதும் பிரச்சிகைளையும் பாடசாலைகளில் நடைபெறுகின்ற மற்றும் நாட்டில் சமகாலத்தில் இடம்பெறுகின்ற பிரச்சினைகளையும் ஆராய்ந்து முன்னெடுக்கக் கூடிய நடவடிக்கைகளும் இந்த மாநாட்டில் தீர்மானங்களாக எடுக்கப்படும் எனவும் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும், மாநாட்டில் சங்கத்தின் 2018 மற்றும் 2019ஆம் ஆண்டுக்கான தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகியோர் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

இந்த மாநாட்டில் கலந்து கொள்பவர்களுக்கு தாபனக்கோவை XXV-2-1 பிரிவின்படி ஒரு நாள் கடமை விடுமுறையும் புகையிரதத்தில் இருவழிப் பயணத்துக்கான ஒருசோடிப் பயணப் பத்திரத்தைப் பெறுவதற்கான உரிமையும் உண்டு என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]