இலங்கை அரசை கண்டித்து கோபுரத்தின் மேல் ஏறி ஆர்ப்பாட்டம்

இலங்கை அரசை கண்டித்து இராமேஸ்வரத்தில் தொலைபேசி கோபுரத்தின் மேல் ஏறி நால்வர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடுக்கடலில் நடத்திய துப்பாக்கி சூட்டில், இராமேஸ்வரம் அடுத்த தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவர் உயிரிழந்ததாக தமிழக ஊடகங்களில் செய்தி வௌியிடப்பட்டுள்ளது.