இலங்கை அரசு சர்வதேசத்தை நிராகரித்து செயற்பட முடியாது

இலங்கை அரசு பொறுப்புக்கூறல் விடயத்தில் சர்வதேசத்தை புறக்கணித்துவிட்டு ஒருபோதும் செயற்பட முடியாது என்று மாற்றுக்கொள்கைக்கான மத்திய நிலையத்தின் பணிப்பாளரும், நல்லிணகச் செயலணியின் பொதுச் செயலாளருமான கலாநிதி பாக்கிசோதி சரவணமுத்து தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இருந்து வெளியாகும் தமிழ் நாளிதழ் ஒன்றுக்கு வழங்கியுள்ள விசேட செல்வியிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இலங்கை அரசு

2015ஆம் ஆண்டு ஐ.நா. மனிதவுரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டிருந்த 30/1 என்ற தீர்மானத்தை நடைமுறைப்படுத்த இலங்கைக்கு மேலும் இரண்டு வருடங்கள் காலஅவகாசம் வழங்கும் புதிய தீர்மானம் கடந்தவாரம் மனிதவுரிமைகள் பேரவையில் உறுப்பு நாடுகளின் ஆதரவுடன் ஏகமானதாக வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டிருந்து.

இந்நிலையில், ஐ.நாவில் நடைபெற்ற உபக்குழு விவாதங்களில் நிலைமாற்றுக்கால நீதிப் பொறிமுறைக்கு கலப்பு நீதிப்பொறிமுறை அவசியம் என்று வலியுறுத்தியிருந்தியிருந்த நல்லிணக்கச் செயலணியின் அறிக்கை மீதும் விவாதங்கள் நடைபெற்றிருந்தன.

அவர் மேலும் வலியுறுத்தியுள்ளதாவது,

2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டிருந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்தவே இலங்கைக்கு மேலும் இரண்டு வருடங்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையின் அரச தலைவர்கள் கூறுவது போன்று சர்வதேசத்தை நிராகரித்து அவர்களால் செயற்பட முடியாது. இலங்கை அரசு சர்வதேசத்தை நிராகரித்துவிட்டு செயற்படும் என்று நான் நினைக்கவில்லை.

அவ்வாறு சர்சதேச பங்களிப்பை நிராகரித்து செயற்படுமானால் தீர்மானத்திற்கு ஆதரவு வழங்கிய நாடுகள் எதிர்ப்புகளை வெளியிடும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]