இலங்கை அரசாங்கத்தால் ஏமாற்றப்படும் தமிழ் மக்கள் – சிவாஜி லிங்கம்

சிவாஜி லிங்கம்தமிழ் மக்கள் கடந்த 70 வருடங்களாக இலங்கை அரசாங்கத்தினால் ஏமாற்றப்பட்டு வருகின்றதாக, வடமாகாண உறுப்பினர் எம்.கே சிவாஜி லிங்கம் தெரிவித்துள்ளார்.

ஜெனிவா மனித உரிமைகள் ஆணையத்தில் வைத்து அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் தொடர்ச்சியாக சர்வதேச சமூகத்தினரை கேட்டு கொள்வதாவது, போர் குற்றம் மற்றும் படுகொலைகள் என்பன தொடர்பில்  சர்வதேச விசாரணைகள் வேண்டும் என்பதாகும்.

2015 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் இலங்கை, ஜெனிவாவில் வழங்கிய வாக்குறுதிகள் எவையும் இதுவரையில் நிறைவேற்றப்படவில்லை.

முன்னாள் இராணுவத் தளபதியும், பீல்ட் மார்ஷல் மற்றும் அமைச்சருமான  சரத் பொன்சேகா, முன்னாள் இராணுவத் தளபதி ஜகத்ஜயசூரிய உட்பட முன்னாள் இராணு அதிகாரிகள் தொடர்பில் சாட்சியமளிக்க தயார் என தெரிவித்திருந்தார்.

எனினும் அவர் அவ்வாறு கூறி, 2 நாட்களுக்கு பின்னர், ஜகத் ஜயசூரிய மட்டுமல்ல இலங்கையில் உள்ள எந்த இராணுவ அதிகாரி குறித்தும் சர்வதேச விசாரணைகளுக்கு இடமளிக்க போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.

ஆகவே இந்த சம்பவம் சர்வதேச விசாரணை குழு, இலங்கை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதையே வலியுறுத்துகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]