இலங்கை அபார வெற்றி

                                          இலங்கை அபார வெற்றி

இலங்கை அபாரம்

இந்தியா சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கையணி முதலாவது ஒரு நாள் போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி ஆரம்பம் முதலே விக்கெட்டுகளை இழந்தது. ஒரு கட்டத்தில் 27 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்திருந்தது. தோனியின் நேர்த்தியான ஆட்டத்தால் இந்திய அணி 100 ஓட்டங்களைக் கடந்தது. இறுதியில் இந்திய அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 112 ஓட்டங்களைப் பெற்றது. இந்திய அணி சார்பில் தோனி 65 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார்.

பந்துவீச்சில் சுரங்க லக்மால் 4விக்கெட்டுகளை வீழ்த்தினார். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கையணி 114 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியீட்டியது.

இலங்கையணி சார்பில் அதிகபட்சமாக உபுல் தரங்க 49 ஓட்டங்களையும், டிச்வெல 26 ஓட்டங்களையும் மத்தியூஸ் 25 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்று இலங்கையின் வெற்றிக்கு வித்திட்டனர். ஆட்டநாயகனாக இலங்கை அணியின் சுரங்க லக்மால் தேர்வுசெய்யப்பட்டார்

இலங்கை அணி தொடர்ந்து 12 தோல்விகளின் பின் பெற்ற வெற்றி இதுவாகும்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]