இலங்கை அணி தொடரின் இறுதிப் போட்டியிலாவது ஆறுதல் வெற்றியை ருசிக்குமா?

இலங்கை அணி தொடரின் இறுதிப் போட்டியிலாவது ஆறுதல் வெற்றியை ருசிக்குமா?

இலங்கைக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வீராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 3 டெஸ்ட், 5 ஒருநாள் போட்டி மற்றும் 1 இருபதுக்கு இருபது போட்டியில் பங்குபெறுகிறது.

டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் இந்தியா கிரிக்கெட் அணி இலங்கையை வைட் வாஷ் செய்துள்ளது. 5 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரையும் 4-0 என்ற கணக்கில் கைப்பற்றி ஒருநாள் தொடருக்கான கோப்பையை தன் வசமாக்கியுள்ளது.இலங்கை அணி

இதுவரை நடந்த 4 ஒருநாள் போட்டிகளில் முதல் போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்திலும், 3-வது போட்டியில் 6 விக்கெட் மீதமிருந்த நிலையிலும், 4-வது போட்டியில் 168 ரன் வித்தியாசத்திலும் இந்தியா கிரிக்கெட் அணி வென்றுள்ளது.இலங்கை அணி

இரு அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி போட்டி நாளை கொழும்பு பிரேமதாஸ விளையாட்டரங்கில் இரவு – பகல் போட்டியாக நடக்கிறது. இப்போட்டி மதியம் 2.30 மணிக்கு தொடங்குகிறது. இந்தியா பேட்டிங்- பந்துவீச்சில் முழு பலத்துடன் இறங்குகிறது.

வீராட்கோலி, ரோகித் சர்மா, தவான், ராகுல், மனீஷ் பாண்டே, டோனி என பேட்டிங் வரிசை பலமாக உள்ளது. பந்துவீச்சில் பார்த்தால் பும்ரா, பாண்ட்யா, அக்‌ஷர் பட்டேல் சிறப்பாக செயல்படுகிறார்கள்.இலங்கை அணி

முந்தைய போட்டியில் வாய்ப்புக் கொடுக்கப்பட்ட இளம் வீரர்கள் மனீஷ் பாண்டே, குல்தீப் யாதவ், ‌ஷர்துல் தாகூர் ஆகியோருக்கு நாளைய போட்டியிலும் வாய்ப்பளிக்கப்படும் எனத் தெரிகிறது.

ரோகித்சர்மாவின் தொடர்ச்சியாக 2 சதமடித்து அசத்தியுள்ளார். கடைசி போட்டியிலும் அவர் சதமடித்து இலங்கை அணியை வைட் வாஷ் செய்வதில் முனைப்புடன் உள்ளார்.

இலங்கை அணியின் நிலைமையோ படு மோசமாகவே இருக்கிறது. பந்துவீச்சு, துடுப்பாட்டம் மற்றும் களத்தடுப்பு இலங்கை அணியைப் பொறுத்த வரை குறிப்பிடும் படி இல்லை. இறுதிப் போட்டியிலாவது ஆறுதல் வெற்றியை ருசிக்குமா என நாளைவரை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் .

இந்தியா அணி : கோலி (கேப்டன்), ரோகித்சர்மா, ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், கேதர் ஜாதவ், மனீஷ் பாண்டே, டோனி, ஹர்த்திக் பாண்ட்யா, ரகானே, புவனேஸ்வர்குமார், பும்ரா, சாஹல், அக்‌ஷர்பட்டேல், ‌ஷர்துல் தாகூர்.

இலங்கை அணி : உபுல் தரங்கா (கேப்டன்), டிக்வெலா, முனவீர, மெண்டீஸ், திரிமானே, மேத்யூஸ், டிசில்வா, ருவர்தனா, தனஞ்செயா, புஷ்பகுமார, பெர்னாட்டோ, மலிங்கா, சமீரா, ஹசர்ரங்கா, குணதிலகா, பெரைரா, சான்டகன்.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]