இலங்கை இந்திய அணிகள் மோதும் முதலாவது இருபதுக்கு இருபது தொடரின் முதலாவது போட்டி இந்தியாவில் கட்டாக் எனும் இடத்தில இன்று நடைபெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் பந்து வீசுவதற்குத் தீர்மானித்தது.

முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்களின் முடிவில் 180 ஓட்டங்களைப் பெற்று 3 விக்கெட்டுக்களை இழந்தது.

இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக ஐயர் 61  ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார். தோனி 39 ஓட்டங்களையும் பாண்டி 31 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இலங்கை அணியின் பந்துவீச்சில் பெரேரா, மத்தியூஸ், பெர்னான்டோ ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

181 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 16 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 87 ஓட்டங்களைப் பெற்றது.

தரங்க அதிக பட்சமாக 23 ஓட்டங்களைப் பெற்றார்.

இந்திய அணியின் பந்துவீச்சில் சஹால் 4 விக்கட்டுக்களையும், பாந்தையா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இலங்கை அணி 93 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோழ்வியைத் தழுவியது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]