இலங்கை அணி தொடர்பில் உணர்ச்சிவசப்பட வேண்டாம்: மஹேல ஜயவர்தன

இலங்கை அணி தொடர்பில் உணர்ச்சிவசப்பட வேண்டாம்: மஹேல ஜயவர்தன

இலங்கை அணி தொடர்பில் உணர்ச்சிவசப்பட்டு தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டாம் என இலங்கை அணியின் முன்னாள் வீரர் மஹேல ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கட் நிறுவனத்தில் சமீபகாலமாக இடம்பெற்றுவரும் சம்பவங்கள் தொடர்பில் ஆத்திரமடைந்துள்ள மஹேல இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் அவர் கூறியுள்ளதாவது, ‘இலங்கை கிரிக்கெட்டை பொறுத்தவரை கடந்த சில நாட்களாக இடம்பெற்றுள்ள விடயங்களும், அதற்கான தீர்வுகளும் கடினமானவை.

அனைவரும் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும், உங்களது அழுக்குகளை பொதுமக்கள் முன்னிலையில் சலவை செய்ய வேண்டாம். உணர்ச்சிவசப்பட்டு எடுக்கும் தீர்மானங்கள் எந்த சந்தர்ப்பத்திலும் சரியானதாக அமையாது.

எனவே இலங்கை அணியை பொறுத்தவரை எது சிறந்தது என்பது தொடர்பில் சிந்திப்பதே சிறந்த தீர்மானமாக இருக்கும்’ என அவர் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]