இலங்கை அணியை வைட் வாஷ் செய்தது இந்திய அணி

இலங்கை அணியை வைட் வாஷ் செய்தது இந்திய அணி.

5வதும் இறுதியுமான ஒருநாள் போட்டியிலும் இலங்கை அணி தோல்வியைத் தழுவியுள்ளது. ஒருநாள்த் தொடரை 5-0 என இழந்தது. இறுதிப்போட்டியிலாவது இலங்கை அணி ஆறுதல் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இறுதிப்போட்டியிலும் கோட்டை விட்டனர்.

நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கையணித் தலைவர் உபுல் தரங்க, முதலில் துடுப்பெடுத்தாடுவதாக தீர்மானித்தார்.

இலங்கை அணியின் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்களாக அணியின் தலைவர் தரங்காவும், நிரோஷான் டிக்வெலவும் களமிறங்கினார்கள். இலங்கையணியின் டிக்வெல விக்கெட் தொடக்கத்திலேயே பறிபோனது. இலங்கை 49.3 ஓவர்கள் முடிவில் 238 ஓட்டங்களை எடுத்து சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

இலங்கை அணி சார்பில் அதிகபட்சமாக திரிமானே 67 ஓட்டங்களையும், மதியூஸ் 55 ஓட்டங்களையும், அணியின் தலைவர் தரங்க 48 ஓட்டங்களையும் குவித்தனர். அணியில் 7 பேர் ஒற்றை இலக்கங்களின் உள்ளே ஆட்டமிழந்துள்ளார்கள்.

இந்திய அணியின் பந்துவீச்சில் புவனேஸ்வர்குமார் 5 விக்கெட்டையும், பும்ராஹ் 2 விக்கெட்டையும் கைப்பற்றினர்.இலங்கை அணியை

239 எனும் வெற்றி இலக்குடன் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 46.3 ஓவர்களில் 4 விக்கெட்களை மாத்திரம் இழந்து 5-0 என தொடர் வெற்றியை பெற்றது.

இந்திய அணி சார்பில் அணித்தலைவர் விராட் கோஹ்லி 110 ஓட்டங்களை எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காது இருந்தார், யாதவ் 63 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர்.இலங்கை அணியை

இலங்கை அணியின் பந்துவீச்சில் மலிங்கா, பெர்னாண்டோ, புஷ்பகுமார, சில்வா தலா ஒரு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்கள்.

ஆட்டநாயகனாக புவனேஸ்வர்க்குமாரும், தொடர் நாயகனாக பும்ராஹ்வும் தேர்வுசெய்யப்பட்டனர்.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]