இலங்கை அகதிகள் இந்தியாவில் பாதிப்பு

வேலூர் மற்றும் அப்துல்புரம் பிரதேசங்களில் ஏற்பட்டுள்ள வௌ்ளப்பெருக்கு காரணமாக இந்தியாவில் வசிக்கும் 9000 இலங்கை அகதிகள் பாதிக்கப்பட்டள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த அகதிகள் வசிக்கும் கிராமங்களை சூழவுள்ள நெல் மற்றும் கரும்பு பயிர்ச்செய்கை நிலங்கள் நேற்று (27) இரவு முதல் வௌ்ளநீரில் மூழ்கியுள்ளதாக கிராமங்களை அண்டி வாழும் இலங்கை அகதிகள் தெரிவித்துள்ளனர்.

வௌ்ளப்பெருக்கு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள தமக்கு நிவாரணங்களை வழங்குமாறு இலங்கை அகதிகள், இந்திய பிராந்திய நிர்வாகியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வௌ்ளத்தினால் பாதிக்கப்பட்ட ஏனைய பகுதிகளுக்கு வழக்கப்படும் நிவாரணங்கள் போன்றே அகதிகளுக்கும் நிவாரணங்களும், நட்டஈடு வழங்கப்படும் என அவர் உறுதியளித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]