இலங்கை அகதிகள் உள்ளிட்ட நால்வர் கைது

இலங்கைக்கு சட்டவிரோதமான முறையில் பயணிக்க முற்பட்ட இலங்கை அகதிகள் உள்ளிட்ட நால்வர் தமிழக பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள தனது தாயை பார்க்க சென்ற நிலையில், குறித்த இலங்கை அகதிகள் இரண்டாவது தடவையாகவும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிங்கள தீவு பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் காணப்பட்ட நாட்டுப்படகினை தமிழக பொலிஸார் சோதனையிட்டதுடன், அங்கு மறைந்திருந்த இருவரிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது, இலங்கைக்கு அகதிகளை அழைத்துச் செல்வதற்காக காத்திருந்தமை தெரியவந்துள்ளது.

அதனையடுத்து, தீவு பகுதியில் சோதனைகளை முன்னெடுத்த பொலிஸார் சந்தேக நபர்கள் இருவரையும் கைதுசெய்துள்ளனர்.

விழுப்புரம் வெளி பதிவில் வசித்த சாயிசன் மற்றும் திருச்சி உறையூர் முகாமை சேர்ந்த ஜெயக்குமார் ஆகியோரே இதன்போது கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

யாழ்பாணத்தில் உள்ள சாயிசனின் தாயாருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் அவரைக் காண்பதற்காக சாயிசனும் அவரது நண்பர் ஜெயக்குமாரும் இலங்கை வர முயற்சித்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதேவேளை, இலங்கையில் இருந்து தனுஸ்கோடி பகுதிக்கு வரவேண்டிய படகு வராததால் படகிற்காக சிங்களத் தீவில் காத்திருந்த நிலையில், சந்தே நபர்கள் கைது செய்யப்பட்டதாக தமிழக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன், இதற்கு முன்னரும் இவர்கள் இலங்கைக்கு செல்ல முயற்சித்த நிலையில் கைதுசெய்யப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில், கைதுசெய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்களிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தமிழக பொலிஸார் கூறியுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]