இலங்கையை வீழ்த்தி வரலாற்று வெற்றியை பெற்றது இந்தியா

இலங்கை இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் இன்னிங்ஸ் வெற்றியை பெற்று இந்திய அணி வரலாற்று சாதனைப்படைத்துள்ளது.

இலங்கை மண்ணில் இதுவரை இரண்டு இன்னிங்ஸ் வெற்றியை எந்தவொரு அணியும் வெற்றதில்லை. இலங்கை அணி பல மோசமான தோல்விகளை சந்தித்திருந்தாலும் எவ்வாறு அடுத்தடுத்து இன்னிங்ஸ் தோல்வியை வரலாற்றில் தழுவ வில்லை.

மூன்று போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா அணியின் அபாராத் துடுப்பாட்டமும், பந்துவீச்சுமே வெற்றிக்கு காரணமாக அமைந்துள்ளது.

மூன்றாவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடியிருந்த இந்திய அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 487 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
இந்திய அணிச்சார்ப்பில் தவான் 119 ஓட்டங்களையும், அதிரடியான டெஸ்ட் ஆட்டத்தை ஆடிய அர்டிக் பாண்டியா 108 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில், லக்ஸான் 5விக்கெட்டுகளையும், புஸ்பக்குமார 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றிக்கொண்டனர். பின்னர் தனது முதலாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 135 ஓட்டங்களுக்கு சலக விக்கெட்டையும் இழந்தது. பந்துவீச்சில் யாதவ் நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றிக்கொண்டார்.

352 ஓட்டங்கள் பின்னிலை பெற்றதால் இலங்கை அணிக்கு தனது இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்டது. இரண்டாவது இன்னிங்ஸிலும் இந்திய அணியின் பந்தவீச்சுக்கு முகங்கொடுக்க முடியால் திணறிய இலங்கை அணி 181 ஓட்டங்களுக்கு ஓட்டங்களுக்கு சுருண்டது.

இதன் காரணமாக இநந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 171 ஓட்டங்களால் வரலாற்று வெற்றியை பெற்றுக்கொண்டது. பந்துவீச்சில் அபாரமாக வீசியிருந்த அஸ்வின் 4 விக்கெட்டுகளை கைப்பற்றிக்கொண்டார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]