இலங்கையை வந்தடைந்தார் சிங்கப்பூர் பிரதமர்

சிங்கப்பூர் பிரதமர்

Singapore’s Prime Minister Lee Hsien Loong, left, disembarks from the aircraft upon his arrival in Colombo, Sri Lanka, Monday, Jan. 22, 2018. Prime Minister Lee Hsien Loong arrived in Sri Lanka Monday on a two day official visit and is expected to meet with Sri Lankan leaders. 

சிங்கப்பூர் பிரதமர் லீ ஷியன் லூங், மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கையை இன்று பிற்பகல் வந்தடைந்தார்.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக அவர் இன்று நாட்டை வந்தடைந்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதுடன், சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தொடர்பிலும் இதன்போது பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளார்.