இலங்கையை பாதித்துள்ள கடும் வறட்சி – பல இலட்சம் பேர் பாதிப்பு

நாட்டில் 19 மாவட்டங்களை நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக 3 லட்சத்து 60 ஆயிரத்து 487 குடும்பங்களை சேர்ந்த 12 லட்சத்து 42 ஆயிரத்து 140 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வட மாகாணத்தினை சேர்ந்தவர்கள் இதில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வட மாகாணத்தினை சேர்ந்த 5 லட்சத்து 3 ஆயிரத்து 183 பேர் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நீர்ப்பாசன துறைக்கு உரித்தான  பெரிய மற்றும் நடுத்தர அளவிலான நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் குறைவடைந்துள்ளதாக நீர்பாசன துறையின் பணிப்பாளர் டி பி அல்விஸ் தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]