இலங்கையை செல்வந்த நாடாக மாற்றுவோம்: மங்கள சமரவீர

இலங்கையை செல்வந்த நாடாக மாற்றுவோம்: மங்கள சமரவீர

எதிர்வரும் 2025ஆம் ஆண்டளவில் இலங்கையை செல்வந்த நாடாக மாற்றுவோம் என நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது குறித்து தொடர்ந்து கருத்து தெரிவித்துள்ள அவர் கூறுகையில், அமெரிக்க டொலருக்கெதிராக இலங்கையின் ரூபாவின் வீழ்ச்சி நிலையினை அரசாங்கம் வெற்றிகரமாக எதிர்கொண்டுள்ளது. இதன் மூலம் இலங்கை ரூபாவின் பெறுமதி உயர்த்தப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைதுள்ளதால், நாடு பாரிய பொருளாதார சிக்கலுக்கு முகங்கொடுத்துள்ளது என சில அரசியல்வாதிகள் பல்வேறு கருத்துக்களை முன்வைத்து வருகின்ற நிலையில், இது தொடர்பில் அமைச்சர் இவ்வாறு விளக்கமளித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]