இலங்கையை சுற்றி பார்க்க வந்த வெளிநாட்டு தம்பதியருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை

இலங்கையை சுற்றி பார்க்க வந்த வெளிநாட்டு தம்பதி, ரயிலில் ஆபத்தான நிலையில் தொங்கிகொண்டு புகைப்படம் எடுத்து கொண்ட நிலையில் கடும் விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளார்கள்.

போர்சுகலை சேர்ந்த இளம் தம்பதி மிகூல் – ரகூல். பல்வேறு நாடுகளுக்கு சென்று அங்கு வித்தியாசமான முறையில் தங்களின் புகைப்படங்கள் எடுத்து சமூகவலைதளங்களில் பதிவிடுவதை இந்த ஜோடி வழக்கமாக கொண்டுள்ளது.

அதன்படி இலங்கையில் Ella நகருக்கு மிகூலும், ரகூலும் கடந்த மாதம் வந்தார்கள். அப்போது ரயில் ஒன்றில் இருவரும் பயணித்தார்கள். பின்னர் இளம் பெண்ணான ரகூல் ரயிலின் வெளிப்பக்கம் ஆபத்தான நிலையில் தொங்கினார்.

ரகூலுக்கு முன்னால் நின்று கொண்டிருந்த அவர் கணவர் மிகூல் மனைவி நெற்றியில் முத்தமிட்டார். இது புகைப்படமாக எடுக்கப்பட்டு சமூகவலைதளங்களில் வைரலானது. இந்த புகைப்படத்தை எடுத்தது யார் என்ற விபரம் தெரியவில்லை.

இதனிடையில் உயிரை பணயம் வைத்து இப்படி புகைப்படம் எடுக்க வேண்டுமா என சமூகவலைதளங்களில் பலரும் ரகூலையும், மிகூலையும் விமர்சித்து வருகிறார்கள். இதனிடையில் குறித்த ரயிலானது மெதுவாக சென்றதாகவும், அதனால் தாங்கள் ஆபத்தில் இருந்ததாக உணரவில்லை எனவும் தம்பதி தெரிவித்துள்ளனர்.

ஆனாலும், இலங்கையின் வேறு பகுதிகளில் செல்லும் ரயில்கள் மிக வேகமாக செல்லும் எனவும் அங்கு அவர்கள் இப்படி செய்தால் அது ஆபத்தில் தான் முடியும் எனவும் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

இலங்கையை இலங்கையை

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]