இலங்கையை கழற்றிவிட்ட தென் ஆப்பிரிக்கா!

இலங்கையை கழற்றிவிட்ட தென் ஆப்பிரிக்கா!

இந்திய அணி தென்ஆப்பிரிக்கா சென்று விளையாட வேண்டும்  என்று இலங்கை அணியுடனான தொடரை ரத்து செய்ய முடிவு செய்துள்ளது தென் ஆப்பிரிக்கா அணி.

தற்போது இலங்கை அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. மீண்டும் 2017-2018ம் ஆண்டில் இலங்கை அணி தென் ஆப்பிரிக்காவில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டது.

இந்த நிலையில் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் இந்தியா அணிக்கு அழைப்பு விடுத்துள்ளது. 4 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் 3 T20 கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட விருப்பம் தெரிவித்துள்ளது.

இதன்பிறகு வங்கதேசம், அவுஸ்திரேலியா தொடர் என இருப்பதால் இலங்கை அணியுடன் விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இலங்கை கிரிக்கெட் வாரியத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் சங்கத்தின் தலைமை நிர்வாகி  கூறியுள்ளார்.

இருப்பினும் இந்திய கிரிக்கெட் வாரியம் தென்ஆப்பிரிக்காவின் விருப்பத்திற்கு இன்னும் சம்மதம் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.