இலங்கையை எதிர்வரும் 2025 ஆம் ஆண்டாகும் போது செழுமைமிக்க நாடாகும்

இலங்கையை எதிர்வரும் 2025இலங்கையை எதிர்வரும் 2025 ஆம் ஆண்டாகும் போது செழுமைமிக்க நாடாக்குவதே எமது இலக்காகும் எனவும், இந்த நோக்கை நடைமுறை சாத்தியமாக்கிக் கொள்வதென்றால் எமது செயற்பாடுகளில் வெளியுலகத்துடனும் கைக்கோர்த்துக் கொள்ள வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அதேபோல், வளர்ச்சி மற்றும் முதலீடுகளை அதிகரித்துக் கொள்வதற்கு தனியார் துறையினருக்கு சந்தர்ப்பமளிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

3 ஆவது வருடமாகவும் பொருளாதார கொள்கை அறிக்கையை பாராளுமன்றத்தில் முன்வைத்து உரையாற்றும்போதே பிரதமர் ரணில் விக்கிரசிங்க இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தேவைக்கு அதிகமான காலமாக நாம் அரசதுறை மீது நம்பிக்கை வைத்து தனியார் முதலீடுகளை கணக்கிலெடுக்காமல் விட்டுவிட்டோம். தேவைக்கு அதிகமான காலமாக தெளிவற்ற கொள்கை மற்றும் சிக்கலான நடைமுறைகளை உபயோகத்தில் கொண்டு தனியார் முதலீடுகளை விரட்டியடித்து விட்டோம்.

துரிதமானதும் துரநோக்கு கொண்டதுமான தனியார்துறையினால் கொண்டு நடத்தப்படும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தனியார் முதலீடுகளை வலுவான வகையில் அடிப்படையாக் கொண்ட பொருளாதாரமொன்றை உருவாக்கவே அரசாங்கம் முயற்சிக்கிறது எனவும் பிரதமர் தனது நீண்ட உரையில் கூறியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]