முகப்பு News Local News இலங்கையை இன்னும் ஒரு தசாப்தத்திற்கு ஐக்கிய தேசிய கட்சியே ஆட்சி செய்யும்: அகிலவிராஜ்

இலங்கையை இன்னும் ஒரு தசாப்தத்திற்கு ஐக்கிய தேசிய கட்சியே ஆட்சி செய்யும்: அகிலவிராஜ்

இலங்கையை இன்னும் ஒரு தசாப்தத்திற்கு ஐக்கிய தேசிய கட்சியே ஆட்சி செய்யும் என கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே கருத்து தெரிவித்தபோதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் எதிர்வரும் பத்து ஆண்டுகளுக்கு நாட்டில் ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சியே நீடிக்கும் என்றும், அதில் எவ்வித மாற்றமும் இல்லை அவர் கூறியுள்ளார்.

இது குறித்து தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், மாகாண சபைத் தேர்தலை தாமதப்படுத்தாது உடனடியாக நடத்துமாறு ஒன்றிணைந்த எதிரணி கூறுவதையே நாமும் கூறுகின்றோம்.

தேர்தலை விரைவில் நடத்த வேண்டும். புதிய தேர்தல் முறையில் காணப்படும் சிக்கல்களே இந்த இழுத்தடிப்பு காரணமாயில், பழைய முறையிலேனும் தேர்தலை நடத்த வேண்டும்.

எதிர்வரும் தேர்தல்களிலும் வெற்றிபெறலாம் என்ற எண்ணத்துடன் தேர்தலை விரைவுபடுத்த ஒன்றிணைந்த எதிரணி கோரி வருகிறது. ஆனால், அது ஒருபோதும் நடக்கபோதில்லை. எதிர்வரும் பத்து ஆண்டுகளுக்கு ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சியே நாட்டில் மேலோங்கும்’ எனத் தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com