இலங்கையை இந்தியாவின் கொலனியாக மாற்றுவதற்கு ஒருபோதும் இடமளியோம்

இலங்கையை இந்தியாவின் கொலனியாக மாற்றுவதற்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை. இந்திய பிரதமர் மோடியின் விஜயம் தொடர்பில் இலங்கையின் தேசியவாதிகள் அச்சம் கொண்டுள்ளதாக பொதுபல சேனா அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.

கிருலபனையில் அமைந்துள்ள பொதுபலசேனாவின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே குறித்த அமைப்பின் தலைவர் ஞானசார மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது,

அரசு சர்வதேச வெசாக் தினத்தை இலங்கையில் நடத்த ஏற்பாடுகளை செய்துவருகிறது. அது நாம் சந்தோஷமடையும் விடையமல்ல. எதிர்காலத்தில் பாரதூரமான பிரச்சினைகளை சந்திப்பதற்கான முன் ஏற்பாடுகளாகும்.

சர்வதேச வெசாக் தினத்தின் பிரதம விருந்தினராக இந்திய பிரதமர் மோடியை அழைத்து வருகின்றனர். அவரின் வருகையை முன்னிட்டு இலங்கையில் உள்ள தேசியவாதிகள் கடும் அதிருப்தியில் உள்ளதுடன், அச்சமும் அடைந்துள்ளனர்.

நாட்டில் ஏற்படும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் ஜனாதிபதி மீது மக்கள் குற்றம் சுமத்துகின்றனர். இவை அனைத்தும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் நடவடிக்கையாகும். இந்தியாவின் கொலனியாக இலங்கையை மாற்றும் செயற்பாட்டை முன்னெடுக்க நாங்கள் ஒருபோதும் அனுமதியளிக்க மாட்டோம் என்றும் அவர் கூறினார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]