முகப்பு News Local News இலங்கையுடன் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த வேண்டிய தேவை – பிரதமர் இம்ரான் கான்

இலங்கையுடன் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த வேண்டிய தேவை – பிரதமர் இம்ரான் கான்

அனைத்து துறைகளிலும் இலங்கையுடன் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த வேண்டிய தேவை உள்ளதாக பாகிஸ்தானின் புதிய பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள இம்ரான் கானுக்கு இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதன்போதே பாகிஸ்தான் பிரதமர் இதனை குறிப்பிட்டதாக பாகிஸ்தான் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இரு நாடுகளுக்கு இடையில் வலுவான உறவுகள் நிலவும் போது, அரசியல், பொருளாதார, பாதுகாப்பு, சுற்றுலா உள்ளிட்ட துறைகளில் துரித வளர்ச்சி ஏற்படும் எனவும் பாகிஸ்தான் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில், இலங்கைக்கும், இலங்கை மக்களுக்கும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com