இலங்கையில் 65 ஆயிரம் பேர் போதைப் பொருள் பயன்படுத்தி வருகின்றனர்

இலங்கையில் 65 ஆயிரம்இலங்கையில் சுமார் 65 ஆயிரம் பேர் போதைப் பொருள் பயன்படுத்தி வருகின்றனர். தேசிய ஆபத்தான ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் கே.கமகே இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை அதிலிருந்து மீட்டெடுப்பதற்கு விசேட வேலைத்திட்டத்தினை முன்னெடுப்பற்கான ஆலோசனைகளும் தற்போது வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கஞ்சா மற்றும் ஹெரோயின் போதைப் பொருள் நாட்டுக்குள் கடத்தப்படுவதனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென குறிப்பிட்டுள்ள அவர் கடல் வழியைப் பயன்படுத்தியே இலங்கைக்கு போதைப் பொருட்கள் கடத்தப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]