இலங்கையில் 60 லட்சம் பேர்வரை சமூக வலைத்தளங்களில் மூழ்கிகிடக்கின்றனர்!!

இலங்கையில் 60 லட்சம் பேர்வரை சமூக வலைத்தளங்களை தீவிரமாக பயன்படுத்துவதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

இதில் பேஸ்புக் பாவனையாளர்களின் எண்ணிக்கை, 50 லட்சத்தில் இருந்து 60 லட்சமாக 6 மாதக்காலப்பகுதியில் அதிகரித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது

அதிலும் இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவின் தகவல்படி, சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோரில் 15 லட்சம் பேர் 10 வயதுக்கும் 18 வயதுக்கும் உட்பட்டவர்கள் என்று தெரியவந்துள்ளது.

டுவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உட்பட்ட சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோரின் குறைந்த வயது 13 ஆகும். எனினும் உலகில் 50வீதமான சமூக வலைத்தளங்களை 10வயதுக்கு உட்பட்டவர்கள் பயன்படுத்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

அவுஸ்திரேலியாவின் நிறுவனம் ஒன்று நடத்திய ஆய்வில், கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்துவோரில் நான்கில் மூன்று பேர் இளைய வயதினர் என்று கண்டறியப்பட்டுள்ளது.

சராசரியாக இளம் வயதினர் நாளொன்றுக்கு 3 மணித்தியாலங்கள் அல்லது அதற்கு மேலதிகமான நேரங்களில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துகின்றனர்.

இலங்கையில் புகைப்பிடித்தல், மது அருந்துதல் உட்பட்ட பழக்கவழக்கங்களுக்கு வயது கட்டுப்பாடு உள்ளது எனினும் ஸ்மார்ட் போன் மற்றும் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கு வயது கட்டுப்பாடு விதிக்கப்படவில்லை

பேஸ்புக் டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களின் கணக்குகளை திறக்க 13 வயதை ஒருவர் அடைந்திருக்கவேண்டும் யுடியூப் கணக்கு திறப்புக்கான ஆகக்குறைந்த வயது 18 ஆகும். இந்தநிலையில் சமூக வலைத்தளம் காரணமாக இளம் வயதினர் மத்தியில் மன அழுத்தவீதம் 27ஆல் அதிகரிக்கின்றது.

அமரிக்காவை பொறுத்தவரையில் நாளொன்றுக்கு 3 மணித்தியாலங்களுக்கு மேல் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் சிறுவர்கள் மத்தியில் ஆட்கொலைக்கான நோக்கங்கள் அதிகரிக்கின்றன என்று கண்டறியப்பட்டுள்ளது.

இதனை இலங்கையர்கள் வெறுமனே தரவாக மாத்திரம் எடுத்துக்கொள்ளக்கூடாது ஏனெனில் தற்கொலை வீதத்தில் இலங்கை இன்று உயர்ந்த நிலையில் உள்ளமையை மறுக்கமுடியாது

இந்தநிலையில் இலங்கையில் பெற்றோர் மத்தியில் சமூக வலைத்தளங்கள் தொடர்பில் அறிவூட்டுவது அவசியமாகிறது என்றும் அந்த ஆய்வின் முடிவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]