இலங்கையில் வாகன பதிவில் வீழ்ச்சி

கடந்த வருடத்தில் வாகன பதிவு நூற்றுக்கு எட்டு தசம் நான்கு வீதம் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விசேடமாக முச்சக்கரவண்டி, மோட்டார் வாகனம் உள்ளிட்டவற்றின் பதிவு வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் 2017ஆம் ஆண்டுக்கான அறிக்கையில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, பேருந்து மற்றும் பொருட்களை ஏற்றியிறக்க பயன்படுத்தப்படும் வாகனங்களின் பதிவு அதிகரித்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]