இலங்கையில் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்க சர்வதேச நீதித்துறை அவசியம்

காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம், இராணுவம் கையகப்படுத்தியிருக்கும் காணிகளை விடுவித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துவதாக, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் ஷெய்ட் ராட் அல் ஹுஸைன் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையில் மனித உரிமை
United Nationas, Prince Zeid al Hussein

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 36ஆவது அமர்வு, ஜெனீவாவில் நேற்று ஆரம்பமானது. அதன்போது, தனது வாய்மூல அறிக்கையை, உயர்ஸ்தானிகர் வழங்கினார்.

ஒவ்வொரு நாடு பற்றிய தனது கருத்துகளை வெளிப்படுத்திய அவர், இலங்கை சம்பந்தமாகவும் தன்னுடைய கருத்தை வெளிப்படுத்தினார்.

சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தினதும் சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தினதும் மீறல்கள் இடம்பெற்றதாகக் கூறப்படுகின்றமை குறித்து, இலங்கையால் குறிப்பிடத்தக்க நடவடிக்கைகள் எடுக்கப்படாத நிலையில், உலகளாவிய நீதித்துறையின் பயன்பாடு என்பது, மேலும் அவசியப்படுத்தப்படுகிறது என்று, அவர் இங்கு குறிப்பிட்டார்.

வடக்கில் மேற்கொள்ளப்பட்டுவரும் போராட்டங்கள் தொடர்பாகவும், அவர் தனது கவனத்தைச் செலுத்தினார். “வடக்கில், பாதிக்கப்பட்டவர்களால் மேற்கொள்ளப்படும் போராட்டங்கள், சீர்திருத்தங்களைக் கொண்டுவருவதில் காணப்படும் மந்த நிலைமையை வெளிப்படுத்துகின்றன” என்று தெரிவித்த அவர், ஜெனீவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்தி, நிலைபேறுகால நீதிப் பொறிமுறையைக் கொண்டுவருமாறு, அரசாங்கத்தை வலியுறுத்துவதாகவும் தெரிவித்தார்.

இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்வது, மனித உரிமைகள் பேரவையைச் சாந்தப்படுத்துவதற்கான நடவடிக்கைகளாக, அரசாங்கத்தால் பார்க்கக்கூடாது என்று குறிப்பிட்ட அவர், மாறாக, அனைத்து மக்களின் உரிமைகளை வழங்குவதற்கான நடவடிக்கையாக அமைய வேண்டுமெனக் குறிப்பிட்டார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]